பொது இடத்தில் புகைப்பிடித்த வாரிசு நடிகையை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்..!!

பிரபல பாலிவுட் சினிமாவின் வளரும் நடிகை அனன்யா பாண்டே. இவர் உறவினரின் திருமணச் சடங்கில் கலந்துகொண்ட போது புகைப்பிடித்துள்ளார். அதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
ananya pandey

உறவினரின் திருமண கொண்டாட்டத்தின் போது பிரபல வாரிசு நடிகை புகைப்பிடித்த போட்டோக்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து, நெட்டிசன்கள் பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்தியில் பிரபல வில்லன் நடிகராக இருப்பவர் சங்கி பாண்டே. இவருடைய மூத்த மகள் அனன்யா பாண்டே, கடந்த சில பாடங்களுக்கு முன்பு திரைத்துறையில் நடிகையாக கால்பதித்தார். இயக்குநர் கரண் ஜோஹர் தயாரித்து இயக்கிய ‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்-2’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அந்த படம் தோல்வியை தழுவினாலும், இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வந்தன. மேலும் அறிமுக நாயகிக்கான ஃப்லிம்பேர் விருதும் அதே ஆண்டில் அனன்யாவுக்கு கிடைத்தது. கடந்தாண்டு விஜய் தேவரகொண்டா உடன் இவர் நடித்த ‘லிகர்’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகின. 

ananya pandey

ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. அனன்யா தொடர்ந்து நடிக்கும் படங்கள் தோல்வி அடைந்து வருகின்றன. எனினும் பாலிவுட்டில் நிலவும் வாரிசு ஆதிக்கத்தால், அனன்யாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

இந்நிலையில் உறவினர் அலன்னா என்பவருடைய திருமண விழாவில் அனன்யா சமீபத்தில் பங்கெடுத்துள்ளார். அப்போது மெகந்தி போடும் நிகழ்வின் போது, அவர் தோழிகளுடன் சேர்ந்து சிகரெட் பிடித்துள்ளார். இதை புகைப்படமாக எடுத்து சில சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

அதை பார்க்கும் நெட்டிசன்கள் சிலர், பாலிவுட்டில் வாரிசு நடிகர்கள் இப்படித்தான், பொறுப்பற்றவர்கள். பொதுவெளியில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாது. அனன்யா புகைப்பிடிப்பவராக இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை என்று நெட்டிசன்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

ananya panday

அதேசமயத்தில் ஒருசிலர், அனன்யா புகைப்பிடிப்பது அவருடைய தனிப்பட்ட விஷயம். ஒருவேளை நாமும் அவர் போன்ற சூழலில் இருந்திருந்தால், இப்படித்தான் இருந்திப்போமோ தெரியாது. எனினும், பட்டப்பகலில் நம்மை புகைப்படம் எடுப்பார்கள் என்று தெரிந்திருந்தும் அனன்யா பெரும் கூட்டத்துக்கு புகைப்பிடித்துள்ளார். அதனால் இதை விளம்பரத்துக்காகவே செய்துள்ளார். அதன்காரணமாக இப்புகைப்படத்தை ஷேர் செய்து, இதற்கு வலு சேர்க்காமல் இருப்பது நல்லது என்றும் தெரிவித்துள்ளனர்.

From Around the web