டி.ஆரை போன்று தசாவதானியாக துடிக்கும் ஹிப்ஹாப் ஆதி..!

 
ஹிப்ஹாப் ஆதி

புதியதாக தயாராகவுள்ள படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், நடிப்பு என சகல வேலைகளையும் தனி ஆளாக செய்யவுள்ளார் நடிகர் ஹிப்ஹாப் ஆதி.

நடிகர் சிம்புவின் தந்தையும் பிரபல இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தர் ஒரு படத்துக்கு தேவையான சகல வேலைகளையும் ஒரே ஆளாக செய்யக் கூடிய திறமை படைத்தவர். அதனால் அவரை தமிழ் சினிமா உலகம் தசாவதானி என்று குறிப்பிடும்.

அவ்வாறு அவர் தசாவதானியாக பணியாற்றிய அனைத்து படங்களும் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு பெற்றன. நாளிடைவில் காலங்கள் மாற சினிமாவை விட்டு ஒதுங்கி கொண்டு, தற்போது தீவிர அரசியலில் டி.ஆர். பங்கெடுத்து வருகிறார்.

இந்நிலையில் தமிழ் திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் ஹிப்ஹாப் ஆதி, ஏற்கனவே தான் நடிக்கும் படங்களுக்கு பாடல்களை எழுதுவது, இசையமைப்பது, பாடுவது போன்ற பணிகளை செய்து வருகிறார்.

இவர் தற்போது நடிக்கும் ‘சிவகுமாரின் சபதம்’ என்கிற படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், நடிப்பு என முக்கியமான வேலைகள் அனைத்தையும் அவரே செய்யவுள்ளார்.

எதற்காக அனைத்து பணிகளையும் அவராகவே செய்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் இதன்மூலம் ரசிகர்களிடம் ‘சிவக்குமாரின் சபதம்’ படத்துக்கு தனி கவனம் கிடைத்துள்ளது. 

From Around the web