இது நான் படித்து வாங்கின டாக்டர் பட்டம்: ஹிப்ஹாப் ஆதி

நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி, இசை தொழில்முனைவு பிரிவில் பி.எச்.டி முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். 
 
hiphop adhi

இந்தியாவிலேயே முதல்முறையாக இசை தொழில்முனைவு (Music Entrepreneurship ) என்கிற பிரிவில் பி.ஹெச்.டி முடித்துவிட்டு இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹிப்ஹாப் தமிழா அதி, தனது சுயாதீன படைப்புகள் மூலமாக பிரபலமானார். விஷால் நடிப்பில் சுந்தர். சி இயக்கத்தில் வெளியான ‘ஆம்பள’ படத்தில் முதன்முதலாக சினிமாவில் இசையமைப்பாளராக கால்பதித்தார்.  அதை தொடர்ந்து தனி ஒருவன், அரண்மனை 2, கத்தி சண்டை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார். 

இதற்கிடையில் மீசைய முறுக்கு என்கிற படம் மூலம் நடிகராக மாறினார். அந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததும், நட்பே துணை, நான் சிரித்தால், சிவக்குமாரின் சப்தம், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தார். தொடர்ந்து பல்வேறு படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் இசை தொழில்முனைவு  பிரிவில் பி.எச்.டி முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். நாட்டிலேயே முதன்முறையாக குறிப்பிட்ட இத்துறையில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளது ஹிப்ஹாப் ஆதி தான். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக படித்து, ஆய்வுகள் மேற்கொண்டு பிஎச்.டி சமர்ப்பித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளதாக கூறினார். 
 

From Around the web