சினிமாவை விட்டு விலகும் ஹிப்ஹாப் தமிழா ஆதி... என்ன காரணம் தெரியுமா ?

 
1

சினிமாவில் இருந்து விலகப் போவதாகவும் முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும் கூறியிருந்தார் தளபதி விஜய்.

இந்த நிலையில் விஜய் போலவே நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் தமிழா ஆதியும் சினிமாவை விட்டு விலகப் போவதாகவும்  வேறொரு துறையில் அவர் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த ’பிடி சார்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி நிலையில் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும் இதற்கு முன்னர் அவர் நடித்த படங்களும் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை என்பதால் இசையை மட்டும் கவனிக்கலாம் என்று சிலர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால் இசை, நடிப்பு இரண்டுமே எனக்கு வேண்டாம், சினிமாவை வீட்டை விலகப் போகிறேன் என்று கூறிய ஹிப்ஹாப் தமிழா ஆதி, சமீபத்தில் பிஹெச் டி டாக்டர் பட்டம் முடித்துள்ளதை அடுத்து அவர் தனது தந்தையை போலவே கல்லூரி ஆசிரியர் பணிக்கு செல்ல இருப்பதாகவும் ஆசிரியர் பணியில் தனது சேவையை தொடங்கி நல்ல மாணவர்களை உருவாக்கி, ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று அவர் கூறியுள்ளதாக தெரிகிறது.

பணம் கொழிக்கும் சினிமா துறையை விட்டு விட்டு சேவை மனப்பான்மையுடன் ஆசிரியர் தொழிலுக்கு செல்ல ஹிப் ஹாப் தமிழா ஆதி முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுவதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

From Around the web