வார் 2 படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கிறார்- உறுதி செய்த ஹ்ருத்திக்..!!

 
junior ntr

பாலிவுட் சினிமாவில் யஷ் ராஜ் ஃப்லிம்ப்ஸ் தயாரிப்பில், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 2019-ம் ஆண்டு வெளியான படம் வார். ஹ்ருத்திக் ரோஷன், டைகர் ஷெராஃப், வாணி கபூர், அசுதோஷ் ராணா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. ரூ. 170 கோடி பட்ஜெட்டில் உருவான வார், மொத்தமாக ரூ. 475 கோடி வரை வசூல் சாதனை படைத்தது

தற்போது இதனுடைய இரண்டாவது பாகத்தை தயாரிக்க யஷ் ராஜ் ஃப்லிமிப்ஸ் முடிவு செய்துள்ளது. சமீபத்தில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அந்நிறுவனம், வார் 2 படத்தை அயன் முகர்ஜி இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

அப்போது பல பிரபலங்கள் அவருக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துச் செய்தி பதிவிட்டு இருந்தனர். பாலிவுட் நடிகர் ஹ்ருத்திக் ரோஷனும் ஜூனியர் என்.டி.ஆருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி ட்வீட் செய்திருந்தார். அதில், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தாரக். இந்த நாள் மகிழ்ச்சியாகவும், வரும் ஆண்டு ஆக்‌ஷன் நிறைந்ததாகவும் அமைய வாழ்த்துகிறேன். யுத்தபூமியில் உங்களுக்காக காத்திருக்கிறேன் நண்பா. நாம் சந்திக்கும் வரை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருங்கள்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார். இதன்மூலம் ‘வார் 2’ படத்தில் ஜூனியர் என்டிஆர் வில்லனாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

From Around the web