தேன்மொழி சீரியல் பிரபலம் திடீர் மரணம்- அதிர்ச்சியில் சின்னத்திரை கலைஞர்கள்..!

 
தேன்மொழி சீரியல் பிரபலம் திடீர் மரணம்- அதிர்ச்சியில் சின்னத்திரை கலைஞர்கள்..!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் தேன்மொழி சீரியலில் ஜாக்லினின் அப்பாவாக நடித்து வந்த குட்டி ரமேஷ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருடைய மறைவுக்கு சின்னத்திரை கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் தொடர்ந்து சம்பவித்து வரும் மரணங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. அதிலும் திரையுலகின் பிரபலங்கள் தொடர்ந்து மறைந்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வந்த நெல்லை சிவா திடீரென மாரடைப்பால் காலமானார். கொரோனாவால் ஷூட்டிங் இல்லாமல் போக, ஊருக்கு சென்ற நிலையில் அவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேபோல விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் மற்றொரு தொடர் தேன்மொழி. இதில் கதாநாயகி ஜாக்லினின் அப்பாவாக நடித்து வந்த குட்டி ரமேஷ் உயிரிழந்த செய்தி வெளியாகி பலரையும் சோகமடையச் செய்துள்ளது.

இந்த சீரியலில் குட்டி ரமேஷ் நடித்து வந்த சுப்பையா கதாபாத்திரம் பலருக்கும் பிடிக்கும். மிகவும் சாதுவான அப்பாவாகவும், கண்டிப்பான ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் குட்டி ரமேஷ். 

முன்னதாக 1980-களின் முற்பகுதியில் சினிமாவில் கால்பதித்த குட்டி ரமேஷ் பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து சின்னத்திரைக்கு வந்த அவருக்கு சன் டிவி சீரியல்கள் பெரியளவில் பிரபலத்தை பெற்று தந்தன. நடிகர் குட்டி ரமேஷ் குடும்பத்தினருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

From Around the web