தொகுப்பாளர் ரக்‌ஷன் மனைவி இவர்தான்- விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற ஜோடி..!

 
தொகுப்பாளர் ரக்‌ஷன் மனைவி இவர்தான்- விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற ஜோடி..!

விஜய் டிவியின் தொகுப்பாளர் ரக்‌ஷனுக்கு திருமணம் முடிந்துவிட்ட செய்தி வெளியானதை அடுத்து, அவருடைய மனைவி எப்படி இருப்பார் என்பதை பலரும் அறிந்துகொள்ள ஆர்வம் காட்டி வந்தனர். ஒரு சிலர் இன்ஸ்டாவின் ரக்‌ஷனுக்கே பிங் செய்து தொல்லை கொடுத்தனர்.

இந்நிலையில் ரக்‌ஷன் தன்னுடைய மனைவி சரண்யா கோபாலனுடன் விருது வழங்கும் விழாவில் முதன்முறையாக பங்கேற்றுள்ளார். தம்பதி சமேதமாக அவர்கள் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

உண்மையில் ரக்‌ஷன் தனது மனைவி சரண்யாவை காதலித்து கரம்பிடித்துள்ளார். இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். தற்போது ரக்‌ஷன் மற்றும் சரண்யா தம்பதிக்கு  இனியா என்கிற பெண் குழந்தையும் உள்ளது.

ரக்‌ஷனின் மனைவி சரண்யாவுக்கு கேமரா என்றாலே பிடிக்கதாம். அதனால் தான் மீடியாவில் அவர் தலைக்காட்டவில்லை. விஜய் டிவி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோரிக்கை விடுத்தும் சரண்யா ஏற்றுக்கொள்ளவில்லை. 

கடைசியில் ஒருகட்டத்தில் தனக்கு திருமணமான விஷயத்தை சமூகவலைதளத்தில் அறிவித்தார் ரக்‌ஷன். அதுவும் அவருடைய மனைவிக்கு தெரியாமல். தொடர்ந்து அவருக்கு பலரும் வாழ்த்துகள் கூற, மீடியாவின் மற்றொரு முகம் சரண்யாவுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து கணவர் ரக்‌ஷனுடன் தற்போது டிவி விழாக்களில் பங்கொள்ள துவங்கியுள்ளார். விரைவில் விஜய் டிவியிலும் தலைக்காட்டுவார் என எதிர்பார்க்கலாம்.  
 

From Around the web