யூடியூபர் இர்பானை விளாசிய தொகுப்பாளினி VJ பார்வதி..!

இந்த நிகழ்வை அவர் தனது யூட்யூப் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டிருந்தார். ஆனால், அந்த வீடியோவில் பதிவான ஒரு காட்சி பலரது கவனத்தையும் விமர்சனத்தையும் ஈர்த்தது.
காருக்குள் இருந்து பரிசுப் பொருட்களை வழங்கும்போது, ஒரு பெண்மணி அந்தப் பொருளை பிடுங்கிக் கொண்டு செல்வது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.
இதனை அடுத்து, இருபான், "என்ன இப்படி செய்கிறார்கள்? உங்களுக்கு தானே கொடுக்கப் போகிறோம்? எதற்காக என் மனைவியின் கையை பிடித்து இழுக்கிறீர்கள்?" என புலம்புவது போல பேசியிருந்தார்.
மேலும், அந்தப் பெண்மணியை ஏளனம் செய்யும் வகையில் பின்னணி இசையுடன் எடிட் செய்யப்பட்ட அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் இருபானின் செயலை கடுமையாக விமர்சித்தனர். உதவி செய்யும் நோக்கில் சென்றவர், அதை ஒரு பொழுதுபோக்கு உள்ளடக்கமாக மாற்றி, அதில் ஈடுபட்ட ஒரு பெண்ணை அவமானப்படுத்தியது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.
இது ஒரு தனிநபரின் செயலாக மட்டும் பார்க்கப்படவில்லை; மாறாக, சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்கவர்கள் தங்கள் புகழையும் செல்வத்தையும் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்த பெரிய விவாதத்தை தூண்டியது.
இந்த சம்பவம் குறித்து பிரபல தொகுப்பாளினி விஜே பார்வதி தனது கருத்தை பதிவு செய்தார். அவர் கூறுகையில், "இவரு பெரிய ஜமீன் பரம்பரை.. அப்டியே காரில் இருந்து இறங்காமல் தான் மக்களுக்கு உதவி பண்ணுவாரு.. பிறவி பணக்காரர்கள் கூட இப்படி விளம்பரம் செய்வதில்லை.
ஆனால், தன்னிடம் பணம் இருக்கிறது என்பதற்காக இந்த புதிய பணக்காரர்கள் செய்யும் சேட்டைகள் தாங்க முடியாதவை. ரத்தன் டாட்டாவிடமிருந்து இவர்கள் ஒரு பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.