சூடு பிடிக்கும் சூப்பர் சிங்கர் விவகாரம்: பென்னி தயாளை விரட்டும் ரசிகர்கள்..!

 
பென்னி தயாள்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பார்த்து வரும் ரசிகர்கள் பென்னி தயாளை கடுமையாக விமர்சித்து வரும் போக்கு தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அதை உறுதி செய்யும் விதமாக ரசிகர் ஒருவருடைய சமீபத்திய போஸ்ட் அமைந்துள்ளது.

கடந்த சில வாரத்துக்கு முன்னர் ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் கடுமையான போட்டியாளராக எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீதர் சேனா நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது பார்வையாளர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஸ்ரீதர் சேனாவின் வெளியேற்றத்துக்கு காரணம் நடுவர் பென்னி தயாளின் தவறான தீர்ப்பு தான் என்று கூறு சமூகவலைதளங்களில் விமர்சிக்க துவங்கினர்.

இதனால் அதிருப்தி அடைந்த பென்னி தயாள் இனிமேல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி குறித்து எதுவும் பேசப்போவது கிடையாது. இனிமேல் அந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் எண்ணமும் தனக்கு இல்லை என்று கூறி நடப்பு சீசனில் இருந்து வெளியேறிவிட்டார். அதை தொடர்ந்து இந்த விவகாரம் மேலும் பூதாகரமானது.

இந்த சம்பவம் நடந்து பல நாட்கள் கடந்துவிட்ட போதிலும் பார்வையாளர்கள் பென்னி தயாளை விடுவதாக இல்லை. கடந்த வாரம் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதற்காக சமூகவலைதளத்தில் சில பதிவுகளை பதிவேற்றி இருந்தார் பென்னி தயாள். இது குறிப்பிட்ட ரசிகருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உடனே அவர் சூப்பர் சிங்கர் விவகாரத்தை மீண்டும் இழுத்துவிட்டார்.  ஏற்கனவே வெளியேற்றிப்படுவது யார் என்று தேர்வு செய்துவிட்டீர்கள். அதே போல் சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதையும் தேர்ந்தெடுத்து விட்டீர்கள் என்று மிகவும் காட்டமாக விமர்சனத்தை முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்துள்ள பென்னி தயாள், மனம் நொந்துவிட்டது போது, இதுவொரு ஓணத்திற்கான பதிவு என்று மட்டும் தெரிவித்துள்ளார். வரக்கூடிய் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் யாரெல்லாம் இறுதிச் சுற்றுக்கு போவார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. மேலும் வைல்டு கார்டு சுற்றில் ஸ்ரீதர் சேனா மீண்டும் வரலாம் என்று கூறப்படுகிறது.
 

From Around the web