முக்கிய இரண்டு தமிழ் படங்களில் ஓடிடி உரிமையை கைப்பற்றிய ஹாட்ஸ்டார்..!

 
ஹாட்ஸ்டார்

தமிழில் முன்னணி ஓடிடி தளமான ஹாட்ஸ்டார் இரண்டு முக்கிய படங்களில் ஓடிடி ஒளிப்பரப்பு உரிமையை கைப்பற்றி பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை ஓடிடி-யில் ரிலீஸ் செய்ததன் மூலம் தமிழ் குடும்பங்களில் கவனமீர்த்தது ஹாட்ஸ்டார். அதை தொடர்ந்து சிம்புவின் ஈஸ்வரன், ஜெயம் ரவியின் பூமி உள்ளிட்ட படங்கள் ஹாட்ஸ்டாரில் வெளியாகின.

இந்த வரிசையில் த்ரிஷாவின் ‘பரம்பதம் விளையாட்டு’ படமும் ஹாட்ஸ்டாரில் வெளியானது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி அடையவில்லை. தற்போது இரண்டு முக்கிய படங்களில் ஓடிடி உரிமையையும் ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது.

அதன்படி, சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் ஓடிடி உரிமையை ஹாட்ஸ்டார் கைப்பற்றியுள்ளது. இந்த படம் வரும் ஆகஸ்டு 14-ம் தேதி திரையரங்குகளில் நேரடியாக வெளியிடப்படுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியிருக்கும் இடியட் என்ற படத்தையும் ஹாட் ஸ்டார் நிறுவனம் வாங்கி விட்டது. இந்த படத்தை சந்தானத்திற்கு தில்லுக்கு துட்டு என்ற வெற்றி படங்களை கொடுத்த ராம்பாலா இயக்கியுள்ளார்.

இதற்கிடையில் நயன்தாராவின் நெற்றிக்கண் படம் ஹாட்ஸ்டாரில் நேரடியாக ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுதொடர்பாக அந்நிறுவனம் எதுவும் தகவல் வெளியிடவில்லை.
 

From Around the web