’தளபதி 65’ படத்தில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்- இவர் இல்லாம எப்படி..?

 
’தளபதி 65’ படத்தில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்- இவர் இல்லாம எப்படி..?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் கம் ஹீரோ யோகி பாபு இணைந்துள்ளார்.

சென்னை பெருங்குடியில் தளபதி 65 படத்திற்கு பிரமாண்டமான பூஜை போடப்பட்டது. தெலுங்கு சினிமாவின் நம்பர் ஒன் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இந்த படம் 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை குறிவைத்து தயாரிக்கப்படுகிறது. 

இதற்கிடையில் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்ந்து வரும் யோகி பாபு தளபதி 65 படத்தில் இணைந்துள்ளார். இதுதொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக நடிகர் யோகி பாபு, விஜய்யுடன் சேர்ந்து மெர்சல், சர்கார், பிகில் போன்ற படங்களில் நடித்துள்ளார். இது விஜய்யுடன் தொடர்ந்து அவர் நடிக்கும் 4-வது படமாகும். மேலும், இப்படத்தை இயக்கும் நெல்சன் திலீப்குமாரின் முதல் படமான ‘கோலமாவு கோகிலா’ படத்திலும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

From Around the web