இதுக்கு மட்டும் எப்படி போனார்.. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஸ்டாலின்

 
1

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது சீசன் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்தது. பாண்டியன் என்ற கேரக்டரில் ஸ்டாலின் நடித்து வரும் நிலையில் அவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்து வருகிறார். இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு கம்பம் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டி என்ற கிராமத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றின் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

பொதுவாக எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் அவர் செல்வதை தவிர்த்து விடுவார், ஆனால் இது அவரது சொந்த ஊரின் பக்கத்தில் உள்ள கிராமம் என்பதால் உடனே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டார். அதுமட்டுமின்றி ஸ்டாலின் அம்மா, அப்பா மற்றும் இரண்டு சகோதரிகளும் அரசு பள்ளி ஆசிரியர்கள் என்பதால் அவரும் அரசு பள்ளியில் தான் எட்டாவது வரைக்கும் படித்தவர் என்பதால் இந்த நிகழ்ச்சிக்கு சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

அரசு பள்ளிகள் மீது தனக்கு ஒரு இனம் புரியாத பந்தம் இருப்பதாகவும் தெரிவித்துள்ள ஸ்டாலின், குள்ளப்ப கவுண்டன்பட்டி அரசு பள்ளி மாணவர்களுடன் ஆண்டு விழாவில் கலந்து கொண்டதோடு நாள் முழுக்க அந்த மாணவ மாணவிகளுடன் அவர் இருந்ததாகவும் தன்னுடைய பள்ளி பருவமே தனக்கு ஞாபகம் வந்ததாகவும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

From Around the web