பூர்ணிமா பாக்யராஜூக்கு எப்படி திருமணம் நடந்தது... பாக்யராஜுக்கு திருமணம் நடந்ததே ஒரு விபத்து தான் : பிரபலம் ஓபன் டாக்..!

நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்தது குறித்து பாக்யராஜ் பலமுறை பேட்டிகளில் கூறியிருக்கிறார்.. அதேபோல, இவர்களது திருமணம் எப்படி நடந்தது என்று, பல்வேறு பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
அதாவது, டார்லிங் டார்லிங் டார்லிங் ஷூட்டிங்கின்போது, டைரக்டர் என்ற முறையில் அடிக்கடி பாக்யராஜ் வீட்டிற்கு பூர்ணிமா சென்றிருக்கிறாராம்.. அப்போது, பாக்யராஜின் முதல் மனைவி பிரவீனாவுக்கும், பூர்ணிமாவுக்கும் இடையே நல்ல நட்பு இருந்ததாம்.. பிறகு பிரவீனாவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போகவும், இதனால் பாக்யராஜ் மிகுந்த சோகத்தில் இருந்துள்ளார். பாக்யராஜின் அண்ணன் பாக்யராஜை மறுமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி கொண்டிருந்தாலும், பிரவீனாவை மறக்க முடியாத நிலையில் இருந்திருக்கிறார் பாக்யராஜ்.
பிறகு ஒரு கட்டத்தில் தன்னுடைய வாழ்க்கை பாதை மாறி போய்விடக்கூடாது என பயந்து, திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்தாராம். ஷூட்டிங்கில் பூர்ணிமாவை சந்தித்த பாக்யராஜுக்கு அவருடைய எளிமை பிடித்து போகவும், அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்துள்ளார்.. தன்னுடைய விருப்பத்தை பூர்ணிமாவிடம் சொல்லவும், தனது அம்மாவிடம் பேசுங்கள் என்று கூறிவிட்டாராம். இதற்கு பிறகே இரு வீட்டு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றதாம்.
இந்நிலையில், Reflect LifeStyle என்ற யூடியூப் சேனலில் சமீபத்தில் பேசியிருந்த சபிதா ஜோசப், பூர்ணிமா பாக்யராஜூக்கு எப்படி திருமணம் நடந்தது என்பது குறித்து பேசியிருக்கிறார்.. அதில், "பாக்யராஜுக்கு திருமணம் நடந்ததே ஒரு விபத்து போலத்தான்.. வேறு ஒரு நடிகையைதான் பாக்யராஜ் திருமணம் செய்திருந்தார்.. அந்த நடிகைதான் பாக்யராஜூக்கு சோறு போட்டு, கவனித்து வந்தவர்.. பாக்யராஜூக்கு படங்களில் நடித்து தந்து, பல்வேறு சலுகைகளையும் தந்திருந்தார் அந்த நடிகை.
அந்த நடிகையின் ஆதரவால்தான், பாக்யராஜ் அந்த காலகட்டத்தில் வளர்ந்து வந்தார்.. அந்த நடிகையின் தாய்மொழி தெலுங்கு என்பதால், அவருக்கு தமிழ் படங்களில் நடிப்பதற்காக, தமிழ் கற்று கொடுத்தார் பாக்யராஜ்.. சில படங்களில் இணைந்தும் நடித்திருந்தார்.. அதன்பிறகுதான் அந்த நடிகையையே திருமணம் செய்து கொண்டார். பிறகு அந்த நடிகைக்கு உடல்நிலை சரியில்லாமல், போய்விட்டது. அந்த சமயத்தில்தான், பாக்கியராஜின், "டார்லிங் டார்லிங் டார்லிங்" ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது.. மனைவி அங்கு உடல்நிலையில்லாமல், படுத்திருந்த சமயத்தில்தான், பாக்யராஜூக்கு பூர்ணிமா மீது காதல் வந்தது.. அப்போது அவர் கோமாவில் இருந்தார்.. அவர் கோமாவில் இருக்கும்போது, இங்கே பூர்ணிமாவை காதலித்து கொண்டிருந்தார். இதுதான் சினிமா உலகம்.
அதற்கு பிறகே பூர்ணிமாவுடன் திருமணம் நடைபெற்றது., முதல் மனைவிக்கு துரோகம் பண்ணினது மாதிரியான சூழ்நிலை என்றுதான், அதை அப்போது சொல்வார்கள். சினிமாவை பொறுத்தவரை, திருமணத்துக்கு முன்பு எப்படி இருந்தார்களோ தெரியாது, திருமணத்துக்கு பிறகு எப்படி இருக்கிறீர்கள் என்பதைத்தான் பார்ப்பார்கள். இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் நடிகை பிரவீனா இருவரின் திருமணத்தை எம்ஜிஆர்தான் நடத்தி வைத்தார். அதேபோல, பாக்யராஜ் பூர்ணிமா திருமணத்தையும் எம்ஜிஆர்தான் நடத்தி வைத்தார்" என்று கூறியிருக்கிறார்.