படுக்கையறை காட்சியில் நடிக்கும்போது நடிகர்களுக்கு எப்படிப்பட்ட உணர்வு இருக்கும் - தமன்னா ஓபன் டாக்..! 

 
1

தமிழ் திரையுலகத்தில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர் தமன்னா. ரவிகிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் தமன்னாவின் அழகை பார்த்த தமிழ் திரையுலகம் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கியது. வெறும் அழகு மட்டுமின்றி தனக்கு திறமையும் இருக்கிறது என்பதை கல்லூரி படத்தின் மூலம் நிரூபித்தார் தமன்னா. இதனையடுத்து தமிழில் பிஸியாக வலம் வர ஆரம்பித்தார் அவர். அதன்படி விஜய், அஜித், கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிப்போட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் கால் பதித்த தமன்னா அங்கும் தனது வெற்றிக்கொடியை நாட்டி ஜொலித்தார். இதனையடுத்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

தமிழில் வாய்ப்புகள் குறைந்தாலும் பாலிவுட் அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருக்கிறது. அங்கு அவர் நடித்த பப்ளி பவுன்ஸர், ப்ளான் ஏ ப்ளான் பி சூப்பர் ஹிட் ஆகாவிட்டாலும் டீசண்ட்டான வரவேற்பையே பெற்றது. சமீபத்தில் ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகிய படங்களில் நடித்தார். அதேபோல் தெலுங்கிலும் அவர் பிஸியாகவே நடித்துவருகிறார். அதன்படி வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா சங்கரில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். பாலிவுட் பக்கம் கரை ஒதுங்கிய தமன்னாவை நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார். அந்தப் படத்தில் காவாலா என்ற ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தாலும் அந்தப் பாடலின் மூலம் ட்ரெண்டிங்கின் உச்சத்துக்கே சென்றார். அவரது நடனத்தை பார்த்த ரசிகர்கள் சொக்கிப்போயினர் என்றுதான் சொல்ல வேண்டும்.

இதற்கிடையே அவர் லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோது நடிகர் விஜய் வர்மாவை காதலித்தார். அவர்களது திருமணம் எப்போது நடக்கும் என்ற உச்சக்கட்ட ஆர்வத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள். அநேகமாக விரைவில் ஹைதராபாத்தில் அவர்களது திருமணம் நடக்கலாம் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமன்னாவின் நடிப்பில் கடைசியாக சுந்தர்.சி இயக்கிய அரண்மனை 4 திரைப்படம் வெளியானது. அதில் அவரது நடிப்பு அட்டகாசமாக இருந்ததாகவும்; அரண்மனை 4 வெற்றிக்கான காரணங்களில் தமன்னாவின் நடிப்பும் மிக முக்கியமான ஒன்று என்று ரசிகர்கள் பேசினர். பேயாக அவர் நடித்திருந்ததில் முதிர்ச்சி தெரிந்ததாகவும் ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்தனர். இதனால் தமன்னாவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

இந்நிலையில் படுக்கையறை காட்சியில் நடிப்பது குறித்து தமன்னா ஓபனாக பேசியிருக்கிறார். அவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், “படுக்கையறை காட்சிகளில் நடிப்பதற்கு நடிகர்கள் அதிகம் விரும்புவதில்லை. மாறாக நடிகையைவிடவும் அவர்களுக்குத்தான் பதற்றமாகவும், சங்கடமாகவும் இருக்கும். அதனை நான் பலரிடம் பார்த்திருக்கிறேன். அவர்களை பொறுத்தவரை அந்தக் காட்சிகளில் நடிக்கும்போது தங்களைப் பற்றி பெண் நடிகைகள் என்ன நினைப்பார்கள் என்றுதான் கவலைப்படுவார்கள். இதெல்லாம் ரொம்பவே விசித்திரமாகவே இருக்கும். நடிகர்கள் மனதில்தான் பல கேள்விகள் இருக்கும்” என்றார். அவரது இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் இப்போது ட்ரெண்டாகியுள்ளது.

From Around the web