எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு எப்படி சும்மா இருக்கிறது... வெளியான 7G படத்தின் ட்ரைலர்..!   

 
1
சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள  7ஜி படத்தின் டிரைலர் வெளியானது.

டிரீம் ஹவுஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஹாரர் படத்தை என்.ஹாரூன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், சித்தார்த் விபின், சினேகா குப்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு கண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

From Around the web