ஊரடங்கிலும் ஓயாமல் நடக்கும் செம்பருத்தி ஷூட்டிங்க்- எப்படி தெரியுமா..?

 
செம்பருத்தி

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செம்பருத்தி சீரியலுக்கான ஷூட்டிங் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு விதிகள் அமலுக்கு வந்தன.

இதனால் சின்னத்திரை மற்றும் சினிமா ஷூட்டிங் பணிகள் ரத்து செய்யப்பட்டது. டி.ஆர்.பி-யை இழக்க விரும்பாத செம்பருத்தி சீரியல் யூனிட் மாற்று முடிவை கையில் எடுத்துள்ளது. அதன்படி ஹைதராபாத்தில் முகாமிட்டு செம்பருத்தி சீரியலுக்கான ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

விரைவில் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது சின்னத்திரை மற்றும் சினிமா ஷூட்டிங் நடத்த அரசு அனுமதி அளித்தால், மீண்டும் சென்னைக்கு திரும்ப சீரியல் யூனிட் குழுவினர் முடிவு செய்துள்ளனர். 

From Around the web