சிகிச்சை பெற்று வரும் யாஷிகா...!! வெளியான புகைப்படம்..!
 

 
யாஷிகா ஆனந்த்
கார் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் யாஷிகா ஆனந்தின் சமீபத்திய புகைப்படத்தை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சென்னை அருகே நடந்த சாலை விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்த கார் விபத்திற்குள்ளானது. அதில் அவருடைய தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் யாஷிகா படுகாயமடைந்தார்.

அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். ஆரம்பத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர், தற்போது தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவரை குடும்பத்தார் அனைவரும் கவனித்து வருகிறார். சமூகவலைதளத்தில் தன்னுடைய தற்போதைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் யாஷிகா. அதில் அவருடைய இரண்டு கால்களும் முறிந்துபோய் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.

கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை தேறி வருவதாகவும், குடும்பத்தினர் அதற்கு உறுதுணையாக இருப்பதாக பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். குறைந்தது அவர் ஆறு மாத காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று கூறப்படுகிறது. இதனால் மேலும் சில மாதங்கள் அவர் மருத்துவமனையில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
 

From Around the web