ப்ரியா பவானி ஷங்கர் இந்தியன் 2 படத்தில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ?
Jul 17, 2024, 09:05 IST
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2ம் பாகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. 5000க்கும் மேற்பட்ட திரைகளில் ஒளிபரப்பான இப்படம் தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகி இருந்தது. விமர்சன ரீதியாக நெகட்டீவ் அதிகம் இல்லை, நிறைய பாசிட்டீவ் கமெண்ட்ஸ் தான் உள்ளது.
படத்தில் கமல்ஹாசனை தாண்டி சித்தார்த், விவேக், பிரியா பவனி சங்கர் என நிறைய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகை ப்ரியா பவானி ஷங்கர். இவர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், பாராட்டுக்களும் குவிந்துள்ளன. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்காக ப்ரியா பவானி ஷங்கர் ரூ. 50 லட்சும் சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.