எப்படி மேக்கப் போடுவது..? ஸ்டெப் பை ஸ்டெப்பா விளக்கிய நயன்தாரா!

 
1

இன்று சினிமாவில் ஒரு டாப் நடிகையாகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும், பல ஆண்டு காலமாக லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரியாகவும், தயாரிப்பாளர் ஆகவும் பன்முகம் கொண்டு தமிழ் சினிமாவை கலக்கி வருகிறார் நடிகை நயன்தாரா.

கடந்த சில ஆண்டுகளாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து  வருகிறார் நயன்தாரா.

இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ஜவான் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் பெரிய அளவில் வசூல் சாதனையை படைத்திருந்தது.இந்தப் படத்திற்காக தாதாசாகெப் பால்கே இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விழாவில் நடிகைக்கான விருது நயன்தாரா பெற்றிருந்தார்.

இந்த நிலையில் தற்போது நயன்தாராவின் 9 ஸ்கின் மேக் அப் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதன்படி, 9 ஸ்கின் ப்ரோடுக்டை வைத்து எப்படி மேக்கப் பண்ணுவது என்பதை ஸ்டெப்  பை ஸ்டெப்பா எடுத்துக்காட்டியுள்ளார்.

அதாவது தன்னுடைய 9 ஸ்கின் அழகு சாதன பொருட்களை வைத்து எப்படி மேக்கப் போடுவது என்பதை குறித்த வீடியோவில் பதிவிட்டுள்ளார் நயன்தாரா. தற்போது குறித்த வீடியோ வைரலாகி உள்ளது.

From Around the web