ஃபயர் படம் எப்படி இருக்கு.. "இது கிளுகிளுப்பான படம்" - பயில்வானின் விமர்சனம்..!

 
1

ஃபயர் திரைப்படம் பத்திரிக்கையாளர்களுக்காக சிறப்பாக திரையிடப்பட்டது. இப்படத்தை பார்த்த பயில்வான் ரங்கநாதன் ஃபயர் படத்தை ரிவ்யூ கொடுத்துள்ளார். அதில், ஃபயர் எங்கெல்லாம் ஏற்படும் காமம், கோபம், இறை வழிபாடு போன்ற இடத்தில் ஃபயர் இருக்கும். அதேபோல இந்த திரைப்படத்தில் காமம் இருக்கிறது, கோபம் இருக்கிறது, இறைவழிபாடு என மூன்றும் கலந்த கலவையாக இந்த திரைப்படம் வெளியாகியிருக்கிறது. நாகர்கோவிலில் பல பெண்களை ஏமாற்றி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட காசி என்பவன், தற்போது சிறையில் இருக்கிறான். அந்த காமக் கொடூரனை போல,இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார் பாலாஜி முருகதாஸ். அவன் பல பெண்களிடம் மென்மையாக பேசி, அவர்களின் பலவீனத்தை தட்டி சரியான நேரத்தில் அவர்களை சூறையாடுவது தான் பாலாஜியின் வேலை.


அவனுது வலையில், ரச்சிதா மகாலட்சுமி, சாந்தினி தமிழரசன், காயத்ரி, சாக்ஷி அகர்வால் என நான்கு பேர் விழுகின்றனர். அவர்களை பாலாஜி சூறையாடி விடுகிறான். இவனிடம் இருந்து இந்த நான்கு பெண்கள் எப்படி விடுபடுகிறார்கள், அவனுக்கு என்ன தண்டனை கிடைக்கிறது என்பது தான் படத்தின் கதை. இந்த திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பவர் ஜே எஸ் கே சதீஷ்குமார். அதேபோல பாலாஜி முருகதாஸ் ஆன்ட்டி ஹீரோவாக, இந்த பூனையும் பாலை குடிக்குமா என்ற கேரக்டரில் அழகாக நடித்திருக்கிறார். பாலாஜி எப்படி பெண்களை ஏமாற்றுகிறார் இவரது தகிடுதத்தம் என்ன என்பதை துப்பறிந்து ஆராய்ந்து கண்டுபிடிக்கிறார் ஜே எஸ் சதீஷ்குமார்.


இந்த திரைப்படத்தில் பெண்களை சீரழிக்கும் சண்டாளனாக பாலாஜி முருகதாஸ் மாறி இருக்கிறார். தன்னுடைய கதாபாத்திரம் உணர்ந்து அழகாக நடித்திருக்கிறார் பாலாஜி, இந்த திரைப்படத்தின் மூலம் அவருக்கு நிறைய படங்களில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். சின்னத்திரை சரோஜாதேவி என்று அனைவராலும் போற்றப்பட்ட ரச்சிதா மகாலட்சுமி, படத்தில் ஒரு பாடல் காட்சியில், ஆடைகளை குறைத்து அத்துமீறி மிகவும் கிளாமராக நடித்திருக்கிறார். ரச்சிதா மகாலட்சுமியின் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை பார்த்தவுடன் மெய் மறந்து உச்சி கொட்டும் அளவிற்கு இந்த படத்தில் படு கிளாமராக நடித்திருக்கிறார் ரச்சிதா.


ஃபயர் படம் முழுக்க கவர்ச்சி என்று சொல்லிவிட முடியாது, தேவைக்கு ஏற்ப கவர்ச்சி இருக்கிறது இருந்தாலும் இந்த படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் தான் கொடுத்துள்ளது. கவர்ச்சியை விருப்பி பார்ப்பவர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும் அந்த அளவிற்கு படத்தில் ஃபயர் இருக்கிறது. அந்த படத்தில் நீங்கள் முழுமையாக குளிர் காயலாம். மொத்தத்தில் ஃபயர் படம் உங்களை குஷிப்படுத்தும், கிளுகிளுப்பாக்கும், மகிழ்விக்கும் என்று பயில்வான் ரங்கநாதன் ஃபயர் படத்தின் விமர்சனத்தை கூறியுள்ளார்.

From Around the web