கூலி படம் எப்படி இருக்கு ? ரஜினி படம் பார்த்து என்ன சொன்னார் தெரியுமா ?
Jun 14, 2025, 06:05 IST
மாநகரம், கைதி, விக்ரம், மாஸ்டர் ஆகிய வெற்றிப் படங்களுக்கு பிறகு தற்போது 'கூலி' என்ற படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளதுடன் பாலிவுட் ஸ்டார் அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகவுள்ள 'கூலி' படத்தின் முதல் பாகத்தை ரஜினிகாந்த் சமீபத்தில் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் மிகச் சிறப்பாக வந்திருப்பதாக ரஜினி மகிழ்ச்சி தெரிவித்தார் என்றும் லோகேஷின் பணியை பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரசிகர்களிடையே இப்போது படம் பற்றிய எதிர்பார்ப்பு மேலும் உயர்ந்துள்ளது.
 - cini express.jpg)