50 வயதிலும் கட்டுடல் கொண்ட ஹிருத்திக் ரோஷன்- அம்மாடியோவ்..!!

இந்தி சினிமாவில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஹிருத்திக் ரோஷன், அண்மையில் சமூகவலைதளத்தில் பதிவிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது,
 
hrithik roshan

குழந்தை நட்சத்திரமாக இருந்து ஹீரோவாக நடித்து வரும் ஹிருத்திக் ரோஷனுக்கு தற்போது 50 வயதாகிறது. ஆனால் தனது இளமைக் காலத்தில் எப்படி கட்டுடல் மேனியுடன் வலம் வந்தாரோ, அப்படித்தான் இப்போதும் உள்ளார். இடையில் விவகாரத்து தொடர்பான வழக்குகளை அவர் சந்தித்த போது, சற்று உடல் பருமனாகிப் போனார்.

இப்போது அந்த உடலமைப்பு மாறி, மீண்டும் பழைய கட்டுடலுக்கு மாறி வருகிறார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் ஒரு பதிவை சமீபத்தில் பதிவிட்டுள்ளார். அதில் திரெட் மில்லில் படு வேகமாக ஓடும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்தால் ஹிருத்திக்கு வயது 50 என்பதை நம்பவே முடியவில்லை.

hirthik roshan

மொட்டை மாடியில் சுளீர் என்று அடிக்கும் வெயில் தரும் வியர்வையில் நனைந்தபடி, மேலாடை இல்லாமல் ஜீன்ஸ் மட்டும் அணிந்து அந்த புகைப்படத்தில் அவர் காட்சித் தருகிறார். அவருடைய கடின உழைப்பை பாராட்டி ரசிகர்கள் பலர் கமெண்டுகளில் வாழ்த்துப் பதிவிட்டுள்ளனர்.

அண்மையில் அவர் நடிப்பில் விக்ரம் வேதா திரைப்படம் வெளியானது. இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது அவர் சித்தார்த் ஆனந்த் இயக்கும் ‘தி ஃபைட்டர்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் அனில் கபூர், தீபிகா படுகோன், சஞ்சீதா ஷையிக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
 

From Around the web