திருப்பதி கோயிலுக்குள் நடிகைக்கு முத்தம் கொடுத்த கணவர்..!

 
ஸ்ரேயா சரண் மற்றும் அவருடைய கணவர்
திருப்பதி கோயிலுக்கு முன்பு பிரபல நடிகையின் கணவர் முத்தம் கொடுத்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிப் படங்களில் நடித்து உச்சநட்சத்திரமாக உயர்ந்தவர் ஸ்ரேயா சரண். ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக அவர் நடித்த சிவாஜி படம் ஸ்ரேயாவின் அடையாளமாக இன்றளவும் உள்ளது.

தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த போது, கடந்த 2018-ம் ஆண்டு ரஷ்ய டென்னீஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்ஸிப் என்பவரை காதலித்து திடீரென திருமணம் செய்துகொண்டர். தற்போது இருவரும் ஸ்ரேயாவின் சொந்த ஊரான லக்னோவில் வசிக்கின்றனர்.

இந்நிலையில் கணவருடன் கடந்த 14-ம் தேதி திருப்பதி கோயிலுக்கு சென்றுள்ளார் ஸ்ரேயா. வழிபாடு நடத்தி விட்டு வரும் போது, கோயில் வாசலில் வைத்து கணவர் ஆண்ட்ரே கோஸ்ஸிப் மனைவி ஸ்ரேயாவுக்கு முத்தம் கொடுத்தார்.

இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்துகொண்டு கோயிலில் ஸ்ரேயா இப்படி செய்திருக்கக்கூடாது. இதுபோன்ற சம்பவத்தை அவர் தவிர்த்திருக்க வேண்டும் என்று கருத்து கூறி வருகின்றனர்.

From Around the web