நடிகர் சந்தானத்தின் உறவுக்கார பெண்ணை கூலிப்படை ஏவி கொலை செய்த கணவன்..?

 
விபத்தில் மரணமடைந்த ஜெயபாரதி கணவர் பிரகாஷுடன்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் ஹீரோவாகவும் வலம் வரும் சந்தானத்தின் நெருங்கிய உறவுக்கார பெண் கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவருடைய பெற்றோர் பெண்ணின் கணவர் மீது புகார் தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபாரதி பெற்றோருடன் வசித்து வந்தார். சில வருடங்களுக்கு முன்பு அவருக்கும் அமெரிக்காவில் பணியார்றும் விஷ்ணு பிரகாஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. தற்போது இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

கணவருடன் அமெரிக்கா சென்றுவிட்ட ஜெயபாரதி ஒருசில வருடங்களில் கருத்துவேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து இந்தியா வந்துவிட்டார். அதை தொடர்ந்து தன்னுடைய கணவர் மீது அவர் பணியாற்றும் அலுவலகத்திற்கு புகார் அனுப்பியுள்ளார். இதனால் விஷ்ணு பிரகாஷின் வேலை பறிபோனது.

புகாரை வாபஸ் பெறுமாறு விஷ்ணு பிரகாஷ் தொடர்ந்து ஜெயபாரதிக்கு தொந்தரவு கொடுத்துள்ளார். ஆனால் அதை ஜெயபாரதி கண்டுகொள்ளாமல் இருந்ததாகவே தெரிகிறது. இந்நிலையில் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிச் சென்ற போது ஜெயபாரதி வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

அதை தொடர்ந்து ஜெயபாரதியின் பெற்றோர் கணவர் விஷ்ணு பிரகாஷ் கூலிப் படையை ஏவி மகளை கொலை செய்துவிட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் நடிகர் சந்தானத்திடம் உதவி கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுதொடர்பாக விசாரிக்க காவல்துறை தனிப்படை அமைத்து விசாரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


 

From Around the web