”எனக்கும் ஆசை தான்- ஆனா...” வடிவேலு மகன் உருக்கம்..!!

 
வடிவேலு மகன் சுப்பிரமணி
வலைதள ஊடகம் ஒன்றுக்கு நடிகர் வடிவேலுவின் மகன் சுப்பிரமணி அளித்துள்ள நேர்காணல் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நகைச்சுவை நடிகர்களில் முடிசூடா மன்னனாக இருக்கும் வடிவேலு நான்காண்டு இடைவேளைக்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அவர் அடுத்ததாக நடிக்கும் படத்தை சுராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் பிரபல யூ ட்யூப் சேனல் ஒன்று அவருடைய மகன் சுப்பிரமணியிடம் நேர்காணல் நடத்தியுள்ளது. அதில், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

வடிவேலு மகன் சுப்பிரமணிக்கு ஒரு மகன் மற்றும் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். அவருக்கும் நடிக்க வேண்டும் என்கிற் ஆசை உண்டு. ஆனால் அதற்கு கொஞ்ச நாட்களாகும் என்று நேர்காணலில் அவர் கூறியுள்ளார்.

From Around the web