நான் ஒரு சீரியல் டேட்டர் - நடிகை ரெஜினா ஓபன் டாக்..! 

 
1

சென்னையை சேர்ந்த ரெஜினா கசாண்ட்ரா சினிமாவில் ஹீரோயினாக நடிக்க ஏகப்பட்ட சவால்களை சந்தித்து தனது கடும் முயற்சியால் போராடி நடிகையாக மாறியுள்ளார். இதுவரை பெரிதாக எந்த ஒரு நடிகர்களுடன் கிசுகிசுவில் சிக்காமல் வந்த ரெஜினா கசாண்ட்ரா தான் அதிகப்படியான ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் தான் ஒரு சீரியல் டேட்டர் என்றும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வர சாத்தியமில்லை என்றும் அடுத்த ஆண்டு பொங்கலுக்குத்தான் வரும் என்றும் கூறப்படுகிறது. விடாமுயற்சி படத்தில் வில்லியாக இவர் நடித்து இருக்கிறாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. விரைவில் தெலுங்கில் இவர் நடித்த உத்சவம் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அதற்கான புரோமோஷன் தொடர்பான பேட்டியின் போது ரெஜினா கசாண்ட்ரா வெளிப்படையாக தான் பலருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளதை கூறியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட கிளாமர் போட்டோக்களை அவ்வப்போது அடுக்கி ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ரெஜினா கசாண்ட்ரா. சென்னையில் பிறந்து வளர்ந்து உமன்’ஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் பட்டம் பெற்ற ரெஜினா கசாண்ட்ரா தமிழில் விடாமுயற்சி, தெலுங்கில் உத்சவம் மற்றும் இந்தியில் செக்‌ஷன் 108, ஜாட், ஃபிளாஷ்பேக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். படங்களுக்கு இணையாக வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் ரெஜினா கசாண்ட்ரா. ராக்கெட் பாய்ஸ், ஃபிங்கர் டிப், அன்யாஸ் டுட்டோரியல், ஃபர்ஸி, ஜான்பாஸ் இந்துஸ்தான் கே உள்ளிட்ட பல வெப் சீரிஸ்களிலும் இவர் நடித்துள்ளார். 33 வயதான இவர் இதுவரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை. மேலும், தனது காதலரையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web