இப்போ தான் திருமண வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து வருகிறேன் – நாக சைதன்யா..!

நாகர்ஜூனாவின் மகனான நாக சைதன்யா சில வருடங்களுக்கு முன்பு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.
இதைத் தொடர்ந்து நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை சமீபத்தில் திருமணம் செய்தார்.
திருமண வாழ்க்கையை பற்றி நாக சைதன்யா அளித்த பேட்டியில், திருமண வாழ்க்கை நன்றாக இருக்கிறது. நான் அதை முழுமையாக அனுபவித்து வருகிறேன்.
2 மாதங்கள் தான் ஆகிறது. சினிமாவையும், வாழ்க்கையையும் சமமாகக் கொண்டு சென்று வருகிறோம்.
நாங்கள் இருவரும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் அவர் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர். நான் விசாகத்தை விரும்புகிறேன். நாங்கள் ஒரே நகரங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல.
ஆனால் கலாச்சார ரீதியாக நிறைய தொடர்பு இருந்தது. சினிமா மீதான காதல் மற்றும் வாழ்க்கையில் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.
நாங்கள் இருவரும் ஒன்றாக நடிப்பதற்கு ஏற்றக் கதை அமைந்தால் சேர்ந்து நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு, நிச்சயமாக அவருடைய படங்களில் நடிக்க விரும்புகிறேன் எனக் கூறினார்.