எனக்கு சீட் கொடுக்காத அதே கல்லூரிக்கு நடிகையாக வந்திருக்கிறேன் - நடிகை பெருமிதம்..!!

 
1

தமிழக மக்களிடையே பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் முகேன் ராவ். தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும் அறிமுகமாகியுள்ளார். அறிமுக இயக்குனர் கவின் மூர்த்தி என்பவர் இயக்கத்தில் 'வேலன்' என்ற படத்தில் முகேன் நடித்துள்ளார். இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் சூரி, பிரபு,  தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. 

நகரத்து கதாநாயகனுக்கும், கிராமத்து கதாநாயகிக்கு இடையே உள்ள காதலை மையப்படுத்திய படமாக இப்படம் உருவாகியுள்ளது.ஸ்கைன் மேன் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். கோபி சுந்தர் இசையமைத்துள்ள இந்த படம் டிசம்பர் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தியாகராயநகரில் உள்ள ஜெயின் கல்லூரியில் நடைபெற்றது.

அப்போது விழாவில் பேசிய நடிகை மீனாட்சி "இந்தக் கல்லூரியில் மூன்று வருடத்திற்கு முன்பு படிப்பதற்காக சீட் கேட்டு வந்தேன். அப்போது கிடைக்கவில்லை. ஆனால் இப்போது நடிகையாக,செலிபிரிட்டி ஆக அதே கல்லூரிக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
இவர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'கோப்ரா' மற்றும் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் 'சிவ சிவா' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

From Around the web