நான் சினிமாவை விட்டு விலகி விடுகிறேன் - வனிதா..!

 
1
வனிதா விஜயகுமார் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டி, சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நடந்திருந்தால் நான் சினிமாவை விட்டு விலகி விடுகிறேன். இதை எழுதி வைத்துக்கோங்க என்று அவர் சவால் விடுத்திருக்கிறார்.  

நடிகையும், இயக்குனருமான வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, நடித்திருக்கும் 'திருமதி மற்றும் திரு' (Mrs & Mr) திரைப்படம், சமீபத்தில் வெளியாகி சினிமா வட்டாரத்தில் பலத்த விவாதங்களை கிளப்பியுள்ளது. ஜோவிகா விஜயகுமார் தயாரிப்பில், ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து வனிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் மையக்கரு, 40 வயதைக் கடந்த தம்பதிகளின் குழந்தை குறித்த ஆசைகளும், அதற்காக அவர்கள் சந்திக்கும் சவால்களும் ஆகும்.

இப்படத்தில் இளையராஜா அனுமதியின்று அவரது பாட்டை பயன்படுத்தியதற்காக சர்ச்சை கிளம்பியது. இதனையடுத்து அவரது பெயர்  படத்திலிருந்து நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை  கிளப்பியுள்ளது. இப்படியான நிலையில் வனிதாவின் சமீபத்திய பேச்சு பேசுபொருளாக அமைந்துள்ளது.

அதாவது, “இளையராஜாவுக்கு எனக்கும் நல்ல உறவு இருந்தது. சிறு வயதிலிருந்து அவர் வீட்டில்தான் இருந்தேன். ஆனால், அவர் என் மீது புகார் கொடுத்ததை நான் எதிர்பார்க்கவில்லை." என்று இவர் பேசியது மீடியாவில் மீண்டும் வைரலானது. அதைப் பார்த்த இணைய வாசிகள் இவங்களுக்கு வேலையே இல்லை என்று கமெண்ட் செய்து வந்தனர்.

மேலும், "என்னுடைய படத்தைப் பார்த்த பிறகு என்னை திட்டினால்கூட பரவாயில்லை. நான் எனது படத்தில் காபி அடிக்கவில்லை. என்னுடைய படத்தில் ஒரு சீன் காப்பி அடித்து இருந்தால் கூட நான் சினிமாவை விட்டு விலகி விடுகிறேன் இதை எழுதி வைத்துக்கோங்க.” என்று அவர் பேசியிருந்தார்.

வனிதாவின் இந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அவரது ரசிகர்கள், "இது வனிதாவின் ஸ்டைல்" என்று புகழ்ந்து தள்ளினாலும், சினிமா விமர்சகர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில், "என்னதான் சொல்ல வருகிறார் வனிதா? உண்மையில் அவர் சினிமாவை விட்டு விலகும் எண்ணத்தில் இருக்கிறாரா?" என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

From Around the web