நான் இளைய திலகம் நடிகர் பிரபுவின் சின்ன வீடா கூட போக ரெடி..! நடிகையின் பகீர் ஸ்டேட்மென்ட்..!
பழம்பெரும் நடிகை லக்ஷ்மி - பாஸ்கரன் தம்பதியர் மகள்தான் நடிகை ஐஸ்வர்யா. தெலுங்கு சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா, தமிழில் நடிகர் சிவகுமார் நடிப்பில் வெளியான ‘நியாயங்கள் ஜெயிக்கட்டும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.
ரஜினிகாந்த், சூர்யா, பிரகாஷ் ராஜ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து கவனத்தை ஈர்த்த நடிகை ஐஸ்வர்யா, சிறிய இடைவெளிக்குப் பிறகு, சின்னத்திரைகளிலும் நடித்து வருகிறார்.1994-ம் ஆண்டு தன்வீர் ஆனந்த் என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர் குடும்பத்தை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக படங்களில் நடிப்பதில் இருந்து விலகிவிட்டார். எனினும் ஐஸ்வர்யாவின் திருமண வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இல்லை. 2 ஆண்டுகள் மட்டுமே அவரின் திருமண வாழ்க்கை நீடித்தது.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பல விஷயங்களை வெளிப்படையாக பேசி உள்ளார். நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக் உடன் தனக்கு இருந்த நெருக்கம் மற்றும் பிரபு மீதான காதல் ஆகியவற்றை வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா பேட்டியில் கூறியிப்பதாவது: “சூர்யா என்றே சொல்ல மாட்டேன். சிறு வயதில் இருந்து இப்போ வரைக்கும் சரவணன் என்று தான் அழைப்பேன். சரவணன் மற்றும் கார்த்தி உடன் தான் அதிகம் விளையாடி இருக்கேன். சிவகுமார் சார் சினிமாவை பற்றிய பல விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஐஸ்வர்யா தனது பேட்டியில், “16 வயதில் இருந்தே பிரபுவை தான் காதலிக்கிறேன். இன்னமும் அவர் எனக்கு டார்லிங் தான். இந்த விஷயம் அவரது மனைவி புனிதா அக்காவுக்கே தெரியும்” என்று ஜாலியாகவும் வெளிப்படையாகவும் பேசியுள்ளார். நான் சுயம்வரம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணமே பிரபு உடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது தான். ஆம்பள படத்தில் நடிக்கும் போது கூட அவரை நல்லா சைட் அடிச்சேன். பிரபுவின் சின்ன வீடா போக கூட ரெடி என்று அவரிடமே சொல்ல் இருக்கிறேன். அவர் அந்த காலக்கட்டத்தில் அவ்வளவு அழகா இருப்பாரு..” என்று பல விஷயங்களை வெளிப்படையாக பேசி உள்ளார்.
தொடர்ந்து பேசிய ஐஸ்வர்யா தான் தமிழில் மிஸ் பண்ண படங்கள் குறித்தும் பேசி உள்ளார். தெலுங்கில் நான் நடிக்க கமிட் ஆன போது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு ரோஜா. அந்த படத்தில் முதலில் நடிக்கவிருந்தது நான் தான். தேவையில்லாமல் என் பாட்டியால் நான் அதை மிஸ் பண்ணிட்டேன். அதே போல் தளபதி படத்திலும் ஷோபனா ரோலில் நடிக்க மணி சார் முதலில் என்னை தான் அணுகினார். ஆனா அந்த படத்தையும் மிஸ் பண்ணிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.