நான் பிசிஓஎஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் - நடிகை ஸ்ருதிஹாசன்..!
உலக நாயகன் கமலஹாசனின் மகள் நடிகை ஸ்ருதிஹாசன் பாடகியாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். அதற்குப் பிறகு தனுஷ் நடித்த 3 திரைப்படத்திலும் பாடல் பாடியதோடு தனுசுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து காதலில் சிக்கிய ஸ்ருதிஹாசன் அடுத்தடுத்து தனது காதல் ஜோடியை மாற்றிக் கொண்டே வந்தார். இது ரசிகர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. ஸ்ருதி தொடர்பில் பல்வேறு சர்ச்சை கருத்துகளும் சோசியல் மீடியாவில் பரவத் தொடங்கியன.
இந்த நிலையில், தற்போது 'நான் பிசிஓஎஸ் என்ற அரிய வகை நோயால் அவதிப்படுகின்றேன்' என்று அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் ஸ்ருதிஹாசன்.
அதன்படி அவர் கூறுகையில், நான் பிசிஓஎஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். இதனால் மாதவிடாய் பிரச்சனை ஏற்பட்டு வேலைகளை சரியாக செய்ய முடியவில்லை. கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களிடமும் இயக்குனர்களிடமும் எனக்கு இருக்கும் பிரச்சினை சொல்லி படப்பிடிப்பை இன்னொரு நாளில் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல முடியாது. எனது வேதனையை பொறுத்துக் கொண்டு படங்களில் சண்டைக் காட்சி ஆனாலும் பாடல் காட்சியானாலும் சிரித்துக் கொண்டே நடித்து வருகின்றேன் என்று தனது பிரச்சினையை பகிர்ந்துள்ளார் ஸ்ருதிஹாசன்.