ஆண் நண்பருடன் ஏற்பட்ட உறவால் நான் கர்ப்பம் ஆனேன் - ஷகிலா சொல்லிய ஷாக்கிங் தகவல்!

 
1

90-களில் நடிகை ஷகிலா நடித்த கவர்ச்சி படங்களுக்கு தென்னிந்தியாவில் மிகப்பெரிய அளவில் மவுசு இருந்தது…குறிப்பாக மலையாள முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்முட்டி ஆகியோரின் படங்களே ஷகீலாவின் படங்களோடு போட்டிபோட்டோல் தோற்றுவிடுவோம் என பயந்து நடுங்கினர்…அப்படி ஒரு காலம் இருந்தது.

அதனை போல் தமிழில் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தாலும் கவர்ச்சி நடிகை என்கிற இமேஜை ஷகீலாவால் உடைக்க முடியாமலே இருந்தது…அந்த சமயத்தில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கினார் நடிகை ஷகீலா….அவர் தன்னுடைய சமையல் திறமையை காட்டியதோடு மட்டுமின்றி அவருடைய இமேஜையும் டோட்டலாக மாற்ற உதவியது அந்நிகழ்ச்சி…அதனால் அவர் பெரிய இடத்திற்கே போனார்..

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் யூடியூப்பில் பிரபலங்களை பேட்டி எடுத்து அதன் மூலம் சம்பாதித்து வரும் ஷகீலா சமீபத்தில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார்.

இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்ததில் தான் கர்ப்பமானது குறித்து பேசி இருக்கிறார் ஷகீலா.அதில் அவர் கூறியதாவது ஒரு முறை கர்ப்பமாகி இருக்கிறேன் ஆண் நண்பருடன் ஏற்பட்ட உறவால் நான் கர்ப்பம் ஆனேன் அவருடன் தற்போதும் தொடர்பில் இருக்கிறேன் அவர் இன்றும் என்னுடன் பேசுவார் அப்போ ரொம்ப சின்ன வயசு என்பதால் தான் கருக்கலைப்பு செய்தேன்.அம்மாவும் குழந்தை வேண்டாம்னு சொன்னாங்க என்னைப்பொறுத்தவரை அது சரியான முடிவுனு தான் சொல்வேன்.

நான் கர்ப்பமா இருந்தது எனக்கு தெரியவே தெரியாது ஏனென்றால் எனக்கு சீரற்ற மாதவிடாய் பிரச்னை இருந்தது…அதனால் எனக்கு எதுவும் அதை பற்றி தெரியவில்லை…அதனால் நானும் கண்டுக்காமல் விட்டுவிட்டேன்.என் அம்மா தான் என் வயிற்றை பார்த்து கண்டுபிடித்தார் நான் என்னனு கேட்டதும் ஒன்னுமில்லனு டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் அபார்ஷன் பண்ணிட்டாங்க…அவங்க செய்தது தான் சரி என்பதை பிற்காலத்தில் உணர்ந்தேன் என்று ஷாக்கிங் தகவலை அவர் சொல்லியுள்ளார்.

From Around the web