அவர்களை பார்க்காமல் என்னால் இருக்க முடியாது- ஜகா வாங்கும் ஜி.பி. முத்து..!

 
பிக்பாஸ் செட்டில் ஜிபி. முத்து
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்பது குறித்து டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்து மனம் திறந்து பேசியுள்ளார்.

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இம்மாத இறுதியில் நிகழ்ச்சிக்கான தயாரிப்பு பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்கவுள்ளதாக தினந்தோறும் செய்தி வெளியாகி வருகிறது. அதன்படி டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்து இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கிறார் என்று கூறப்பட்டது. மேலும் பிக்பாஸ் செட்டுக்குள் அவர் சென்று வந்த புகைப்படமும் வெளியானது.

இந்நிலையில், தன்னுடைய குழந்தைகளை பார்க்கமால் இருக்க முடியாது. மேலும் போன் இல்லாமல் இருக்கவே முடியாது என்று கூறியுள்ளார் ஜி.பி. முத்து. இதனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது சந்தேகமே என்று செய்தி கூறப்படுகிறது.
 

From Around the web