கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் அப்படி என்னால் நடிக்க முடியாது..!
May 27, 2021, 09:50 IST
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகுகளில் முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தி கோடி ரூபாய் கொடுத்தாலும் அப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் உடன் பிறந்த சகோதரரும், மூத்த நடிகர் சிவக்குமாரின் மகனுமான கார்த்தி தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் தமிழில் நடிக்கும் பல்வேறு படங்கள் தெலுங்கிலும் வெற்றி பெறுகிறது.
முன்னணி நடிகர்கள் நடிக்கும் கமர்ஷியல் படங்களில் அவர்கள் புகைப்பிடிக்கும் காட்சி அதிகளவில் இடம்பெற்று வருகிறது. இதுதொடர்பாக நடிகர் கார்த்தியிடமும் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர் முடிந்தவரை என்னுடைய படங்களில் புகைப்பிடிப்பதை தவரிக்க முயல்வேன். அதனால் கோடி ரூபாய் கொட்டிக்கொடுத்தாலும் அப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
 - cini express.jpg)