கவர்ச்சியாகவும் ஆபாசமாகவும் என்னால் நடிக்க முடியாது: வீரப்பன் மகள் விளக்கம்..!

 
கவர்ச்சியாகவும் ஆபாசமாகவும் என்னால் நடிக்க முடியாது: வீரப்பன் மகள் விளக்கம்..!

தான் நடித்துள்ள படத்தில் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்ததால் மாவீரன் பிள்ளை படத்தில் ல் நடித்தேன் என்றுள சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் கர்நாடக காவல்துறைக்கு சிம்மசொப்பனமாக இருந்த சந்தனக் கடத்தல் வீரப்பன், கடந்த 2004-ம் ஆண்டு என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்கு முத்துலட்சுமி என்கிற மனைவியும் வித்யா ராணி மற்றும் பிரபா என்கிற விஜயலட்சுமி என இரு மகள்கள் உள்ளனர்.

மூத்த மகள் வித்யா ராணி கடந்த 2020, ஜூலை மாதம் பாஜக கட்சியில் சேர்ந்தார். தற்போது அவர் அந்த கட்சியின் மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தொகுதியிலும் அவர் போட்டியிட விருப்பமனு அளித்தார். ஆனால் அவர் கோரிக்கைவிடுத்த தொகுதியில் பா.ம.க போட்டியிட்டதால் வித்யாராணிக்கு சீட் ஒதுக்க முடியவில்லை. எனினும், தொடர்ந்து கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் வீரப்பனின் இளைய மகள் விஜயலட்சுமி மாவீரன் பிள்ளை என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அவர், ”இந்த படம் விவசாயிகள் மற்றும் மது ஒழிப்பு போராட்டங்கள் குறித்து உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் நடிக்க சம்மதித்தேன். தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. டெல்லியிலும் நடந்தது.  நிச்சயம் சினிமாவில் கவர்ச்சியாகவோ, ஆபாசமாகவோ என்னால் நடிக்க முடியாது”.

”சினிமாவில் நடிப்பதற்கு கணவரும் குடும்பத்தினரும் உறுதுணையாக உள்ளது. பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்க ஆவலாக உள்ளது. என்னை பொறுத்தவரை என்னுடைய அப்பா வீரப்பன் நல்லவர்தான்.  அப்பா வாழ்ந்த காட்டுக்குள் புதையல் இருக்கிறது. ஆனால் அது எங்கே இருக்கிறது என்று எங்களுக்கு தெரியாது’’ என்று விஜயலட்சுமி நிறைவாக பேசினார்.

மாவீரன் பிள்ளை படத்தை ராஜா என்பவர் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் பல்வேறு கதாபாத்திரங்களில் புதிய நடிகர்களே நடித்துள்ளனர். இருந்தாலும் ராதாரவி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த படத்தின் வெளியீட்டு தேதியை வெளியிட படக்குழு முனைப்பு காட்டி வருகிறது. 

From Around the web