மறக்க முடியல... சிறுவயதில் நடந்த கசப்பான சம்பவம் - வரலட்சுமி!

 
1

டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 நிகழ்ச்சி வாரந்தோறும் பரபரப்பு உணர்வுகளைத் தரும் விதமாக ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்து வருகின்றது. அந்தவகையில் தற்போது வெளியான புரோமோ ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ‘என்றென்றும் 80's’ எனும் சிறப்பு கருப்பொருளில் நடைபெறும் இந்த எபிசோட் ரசிகர்களை நெகிழ வைக்கும் விதமாக உருவாகியுள்ளது.

80’s காலகட்டத்தில் இசை, நடனம், திரைப்படங்கள் மற்றும் ஆடைகள் என அனைத்திலும் தனி அழகு காணப்படும். இந்த வாரம் அந்த குணங்கள் அனைத்தையும் தங்களது நடனங்களில் கொண்டு வர போட்டியாளர்கள் முடிவெடுத்துள்ளனர். 

புரோமோவைப் பார்க்கவே ஒவ்வொரு ஜோடியும் 80's காலத்தின் உணர்வுகளை மிக அழுத்தமாக ஆடப்போகின்றார்கள் என்பது தெரிகின்றது. அதிலும் சில ஜோடிகள், தங்களது வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு நடனம் ஆடியுள்ளனர். இது நிகழ்ச்சிக்கு ஒரு உணர்வுப் பூர்வமான திருப்பமாக அமைந்துள்ளது.

நிகழ்ச்சியில் மாஜிக் கண்ணாடி முன்னுக்கு கெமி உங்கள சிரிச்சுப் பாத்திருக்கோம் ஆனால் அழுது பாத்ததில்லை என்று கேட்டிருந்தார்கள். அப்போது கெமி தன்னுடைய வாழ்க்கையில நடந்த சோகமான சம்பவத்தைக் கூறியுள்ளார். அவர் அதன் போது தனக்கு அப்பா, அம்மா கூட இருக்க விருப்பம் ஆனால் எனக்கு என்ற குடும்பம் கூட இருக்கவில்லை. குடும்பத்தோட இருக்கோனும் என்று இருந்தப்போ என்னை அதில இருந்து உடைச்சிட்டாங்க என்றார். மேலும் தன்னை நிறைய பேர் harassment  பண்ணியிருக்காங்க என்றதுடன் தனக்கு நிறைய பாலியல் துன்புறுத்தலும் நடந்ததாக  கூறி அழுதார். 

இதைக் கேட்ட வரலட்சுமி தன்னையும் அப்பா, அம்மா வேலைக்குப் போறதால் வேற வீட்டில விட்டிட்டு போவாங்க அங்கேயும்  தன்னையும் 5,6 பேர் ( abuse) துஸ்பிரயோகம் செய்ததாக கூறியுள்ளார். பிறகு கெமியோட வாழ்க்கைச் சம்பவம் தன்னோட வாழ்க்கை என்று கூறி கண் கலங்கினார்.

இதனைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் சோகத்தில் இருந்தனர். இப்படி புரோமோ வெளியாகிய 1மணி நேரத்திலேயே அதிகளவான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். ரசிகர்கள் புரோமோவுக்கே இவ்வளவு ஆதரவு தந்துள்ளனர் என்றால் ‘என்றென்றும் 80's’ எனும் நெஞ்சை நெகிழச் செய்யும் எபிசோட்டுக்கு எவ்வளவு ஆதரவு தருவார்களோ?. அத்துடன் இவ்வாரம் Zee தமிழில் ஒளிபரப்பாகி மக்களுக்கு சிறந்த அனுபவத்தைத் தரப்போவதாக பார்வையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

From Around the web