நான் ஒன்னும் காசுக்காக தொழில் அதிபரை கட்டிக்கல: நடிகை ஷில்பா ஷெட்டி..!

 
1

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும், தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவும் காதலித்து கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு 12 வயதில் வியான் என்கிற மகனும், 4 வயதில் சமிஷா என்கிற மகளும் இருக்கிறார்கள். வாடகைத் தாய் மூலம் மகளுக்கு பெற்றோர் ஆனார்கள். இந்நிலையில் தான் பணத்துக்கு ஆசைப்பட்டு ராஜ் குந்த்ராவுக்கு மனைவியாகவில்லை என தெரிவித்துள்ளார் ஷில்பா ஷெட்டி.

ராஜ் குந்த்ராவிடம் இருக்கும் பணத்திற்கு ஆசைப்பட்டு தான் அவரை திருமணம் செய்து கொண்டீர்கள் என பேசுகிறார்களே என்று ஷில்பா ஷெட்டியிடம் கேட்கப்பட்டது. அதற்கு கூறியதாவது, இது போன்று பேசுவதற்கு முன்பு கூகுளில் ஷில்பா ஷெட்டி என தேட மறந்துவிடுகிறார்கள் மக்கள். நான் அப்பொழுதே பெரிய பணக்காரி தான். தற்போது அதைவிட பணக்காரியாக இருக்கிறேன் என்றார்.

வெற்றிகரமான பெண்ணாக இருக்கும்போது அந்த வெற்றியை பார்த்து பயப்படாத ஒரு ஆண் தான் துணையாக தேவை. ராஜ் குந்தராவை அவரின் நல்ல குணத்திற்காக மணந்தேன். அவர் நல்லவர் இல்லை என்றால் திருமணமே செய்திருக்க மாட்டேன். ராஜ் குந்த்ராவை விட பெரிய பணக்காரர்கள் எல்லாம் என்னை திருமணம் செய்து கொள்ள முயற்சித்தார்கள் என்று ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.

ஷில்பா ஷெட்டி மேலும் கூறியதாவது, என்னுடைய உணவகமான பாஸ்டியன் நன்றாக செல்கிறது. அங்கு டேபிள் புக் செய்ய என் மேனேஜருக்கு போன் அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. என் உணவகத்தை மக்கள் பெரிய வெற்றியாக்கிக் கொடுத்ததில் சந்தோஷம் என தெரிவித்துள்ளார். ஷில்பாவின் கணவர் தற்போது நடிகராகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web