நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. நீங்களும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் : விஜய் ஆண்டனி..!

 
1

தனது அபார திறமையாலும் நல்ல பண்பாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளவர் தான் நடிகை விஜய் ஆன்டனி.இவரது நடிப்பில் தற்போது பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது .

இந்நிலையில் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விஜய் ஆண்டனி இயேசு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாக கிறிஸ்தவ அமைப்பு ஒன்று அவர் மீது அடுக்கடுக்கான கண்டனங்களை தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.

இந்த பிரச்சனை நாளடைவில் தீவிரமடைய தற்போது இதுகுறித்து விஜய் ஆண்டனி விளக்கம் கொடுத்துள்ளார்.

அன்பார்ந்த கிறிஸ்தவ சபை கூட்டமைப்பின் உருப்பினர்களே, வணக்கம்.

நான் முன்தினம் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில், திராட்சை ரசம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது அல்ல, இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே புழக்கத்தில் இருந்ததுதான், தேவாலயங்களிலும் பயன்படுத்தப்பட்டது, இயேசு பிரான் பயன்படுத்தி இருக்கிறார், என்று கூறி இருந்தேன்.

ஒரு பத்திரிகை நண்பர் என்னிடம் கேட்ட சில கேள்விகளை தொடர்ந்து, நான் பேசியதை இணைத்து, தவறாக அர்த்தபடுத்தியதால், உங்களைப் போன்ற சிலர் மனம் புண் பட்டிருக்கிறீர்கள் என்பது, எனக்கு வேதனை அளிக்கிறது.

நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. நீங்களும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயேசுவை பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

From Around the web