என்கிட்ட அது இல்லன்னு பிரேக் அப் பண்ணிட்டா.! உளறிய ஜெஃப்ரி..!
பிக் பாஸ் எட்டாவது சீசனில் கலந்து கொண்ட ராப் பாடகத்தான் ஜெஃப்ரி. இவர் அம்மாவின் அரவணைப்பில் தான் வளர்ந்துள்ளார். ஆரம்பத்தில் லாஜிஸ்டிக்ஸில் வேலை பார்த்துள்ளார். அங்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதே கானா பாடல்களை பாடி அதன் மீது அவருக்கு அதிகமான ஆர்வம் ஏற்பட அதனையே தொழிலாக மாற்றினார்.
தற்போது கானா பாடல்களை எழுதி பாடி வருகின்றார். அது மட்டும் இன்றி பிரபல கால்பந்து வீரரான ரொனால்டோவை இன்ஸ்பிரேஷன் ஆக கொண்ட ஜெஃப்ரிக்கு கால்பந்து விளையாடுவதிலும் அதிக ஆர்வம் காணப்படுகின்றது.
பிக் பாஸ் வருவதற்கு எல்லாருக்குமே ஒரு காரணம் காணப்படும் போது ஜெஃப்ரிக்கும் தன்னுடைய வீட்டின் வறுமை நிலை மாறவேண்டும், அம்மாவை நன்றாக பார்க்க வேண்டும், என்னைச் சுற்றி இருப்பவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் பிக் பாஸ் வீட்டிற்குள் காலடி வைத்துள்ளார்.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஜெஃப்ரி தனது காதல் பற்றிய சுவாரஸ்யத்தை சகப் போட்டியாளரிடம் பகிர்ந்து உள்ளார்.
அதாவது 12 வயசுல இருந்து ஆறு வருஷமா ஒரு மலையாளப் பெண்ணை காதலிச்சேன். ஆனா அவ என்கிட்ட போன் இல்லாத காரணத்தினால் பிரேக் அப் பண்ணிட்டா என்று தனது காதல் கதையை உளறி உள்ளார்.