கிரிமினல்ஸ் - ஐ ஆண்டவன் பாத்துக்குவான்னு விட்டு போற அளவிற்கு எனக்கு பொறுமை இல்லை - வெளியான இறைவன் பட ட்ரைலர்..! 

 
1

‘என்றென்றும் புன்னகை’, ’மனிதன்’ போன்ற படங்களை இயக்கிய அகமது இயக்கத்தில் உருவாகிய படம் இறைவன். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இந்த படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ளனர். 

கிரிமினல்ஸ் மிருகமா மாறி தப்பு பண்ணும் போது, ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்று விட்டு போற அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை.. என்ற ஜெயம் ரவி பேசும் வசனம் அவரது கேரக்டரை ஓரளவு புரிந்து கொள்ள வைக்கிறது. என் 32 வருட சர்வீஸ்ல இப்படி ஒரு கில்லரை நான் பார்த்ததே இல்லை என உயர் போலீஸ் அதிகாரி கூறும் வசனம் இந்த ட்ரெய்லரில் கவனம் பெறுகிறது.

மொத்தத்தில் ‘இறைவன்’ படத்தின் இரண்டு நிமிட ட்ரெய்லர் இது ஒரு திகில் மற்றும் சஸ்பென்ஸ் படம் என்பதை உறுதி செய்துள்ளது. ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தில் ராகுல் போஸ் வில்லனாக நடித்துள்ளார். மேலும் ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், விஜயலட்சுமி உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

From Around the web