சாந்தினி யாரென்றே தெரியாது- முன்னாள் அமைச்சர் மணிகண்டன்..!

 
அமைச்சர் மணிகண்டன்

மோசடி புகார் அளித்துள்ள நடிகை சாந்தினி யாரென்றே எனக்கு தெரியாது என முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்வதாக கூறி கடந்த 5 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்துவிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஏமாற்றி வருவதாக கூறி நடிகை சாந்தினி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அமைச்சர் மணிகண்டன், எனக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். எனது அரசியல் எதிரிகள் பின்னணியில் இந்த புகார் மனு கொடுக்கப்பட்டிருக்கலாம். மூன்று நாட்களுக்கு முன்பு வழக்கறிஞர் மற்றும் போலீஸ் அதிகாரி இருவரும் பேசினார்கள்.

சாந்தினியுடன் சேர்ந்து வாழ்ந்த புகைப்படங்கள் எங்களிடம் உள்ளன. இதுகுறித்து புகார் கொடுக்காமல் நாங்கள் இருக்க ரு. 3 கோடி தர வேண்டும் என்று மிரட்டினார்கள். தவறு செய்யாத நான் எதற்கு பணம் தர வேண்டும் என்று கேட்டேன். அவர்களுடைய மிரட்டலுக்கு அடி பணியமாட்டேன் என்று தெரிவித்துவிட்டதாக கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தை சட்டப்படி சந்திப்பேன். எனது மனைவியுடனும் இந்த விவகாரம் தொடர்பாக பேசி அவர்கள் இருவரும் மிரட்டியுள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மேலும் கூறினார்.
 

From Around the web