நானாக இருந்திருந்தால் அஜித் சார் மாதிரி பெருந்தன்மையாக நடந்திருப்பேனா என தெரியவில்லை : எஸ்.ஜே சூர்யா..!

 
1

தமிழ் சினிமாவில் அடித்த சூப்பர் ஹிட் படம் வாலி. இந்த படத்தில் அஜித்துடன் சிம்ரன், ஜோதிகா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தை எஸ்ஜே சூர்யா இயக்கியிருந்தார்.

வாலி கொடுத்த ஹிட்டால் அடுத்து விஜய்யின் குஷி படத்தை இயக்கினார் எஸ்ஜே சூர்யா.தொடர்ந்து நியூ, அ..ஆ,இசை போன்ற படங்களை இயக்கிய எஸ்ஜே சூர்யா அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார்.அதனைத் தொடர்ந்து மற்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கிய எஸ்ஜே சூர்யா, தற்போது கோலிவுட், டோலிவுட்டில் வெரைட்டியான நடிகராக மாஸ் காட்டி வருகிறார்…இவர் நடித்தாலே இப்போது அந்த படத்திற்கு அதிக டிமாண்ட் இருக்கிறது…

இறைவி படத்தில் இருந்து தொடங்கிய எஸ்ஜே சூர்யாவின் வெறித்தனமான நடிப்பு, இப்போது மாநாடு, மார்க் ஆண்டனி வரை மாஸ் காட்டுகிறது.இந்நிலையில் தனது முதல் படமான வாலி குறித்து நினைவுகளை பகிர்ந்த எஸ்ஜே சூர்யா அதில் ஹீரோவாக நடித்த அஜித் பற்றி பேசியது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பேசப்படுகிறது.

அதில் அவர் கூறியதாவது வாலி ஷூட்டிங் தொடங்கும் முன்னர் எஸ்ஜே சூர்யா ரொம்பவே மோசமான காஸ்ட்யூமில் இருந்துள்ளார்.பட்டன் இல்லாத சட்டை, தைத்து போடப்பட்ட செருப்பு என பார்க்க எப்படியோ இருப்பாராம் எஸ்ஜே சூர்யா.

ஆனால் அதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாத அஜித் எல்லோரது முன்னிலையிலும் எஸ்ஜே சூர்யாவின் தோளில் கையை போட்டு, இவருதான் என்னோட அடுத்த படத்துக்கு டைரக்டர் என்னோட டைரக்டர் என அறிமுகப்படுத்தி வைப்பாராம்….இது எல்லாம் எனக்கு கண் கலங்கும் கேட்கும் போது என பேசியிருந்தார் எஸ் ஜெ சூர்யா…

இந்த சம்பவத்தை சொல்லி எஸ்ஜே சூர்யா நானாக இருந்திருந்தால் அஜித் சார் மாதிரி பெருந்தன்மையாக நடந்திருப்பேனா எனத் தெரியவில்லை…என இந்த அழகான தருணத்தை அவர் சொல்லியுள்ளார்.

From Around the web