இனிமேல் தனுஷ் படமே வேண்டாம்.. டிராப் செய்த சத்யஜோதி பிலிம்ஸ்..!

 
1
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சத்யஜோதி பிலிம்ஸ். இந்நிறுவனம் கமல்ஹாசன் நடித்த ’மூன்றாம் பிறை’ என்ற திரைப்படத்தை முதல் முதலாக தயாரித்து அதன் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் உருவான முதல் படமான ’பகல் நிலவு’  ’ஜீவா’ ’கிழக்கு வாசல்’ ’இதயம்’ உட்பட பல வெற்றி படங்களை தயாரித்தது.

இந்த நிலையில் தனுஷ் நடித்த ’தொடரி’ ’பட்டாஸ்’ ’மாறன்’ மற்றும் ’கேப்டன் மில்லர்’ ஆகிய நான்கு படங்களை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த நிலையில் 4 படங்களுமே வசூல் அளவில் தோல்வி படங்கள் என்பதால் இனிமேல் தனுஷ் படத்தை தயாரிப்பதில்லை என இந்நிறுவனம் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.  

தனுஷ் நடிப்பில் ‘ராட்சசன்’ ராம்குமார் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருந்த நிலையில் இந்த படத்தை இந்நிறுவனம் டிராப் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ’கேப்டன் மில்லர்’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.  இனிமேல் தனுஷ் படமே வேண்டாம் என சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் எடுத்துள்ள முடிவு திரை உலகினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

From Around the web