”நான் சம்பாதிக்கிறேன், ஜீவனாம்சம் தேவையில்லை” சமந்தா..!

 
சமந்தா
தன்னுடைய விவகாரத்து விவகாரத்தில் நடிகை சமந்தா எடுத்துள்ள முடிவுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் சமந்தா. அதை தொடர்ந்து இருவரும் படங்களில் இணைந்து நடித்தனர். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக தோன்றினர்.

இதன்மூலம் இந்த நட்சத்திர ஜோடிக்கு ரசிகர்கள் உருவாகினர். இருவரும் எங்கு சென்றாலும் சாய் - சாம் என்று ரசிகர்கள் கொண்டாடினர். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார் சமந்தா. குறிப்பாக திருமணத்துக்கு பிறகு அவருடைய படங்கள் சிறந்த தேர்வாக அமைந்தன.

கடந்த சில மாதங்களாக இருவரும் ஹைதராபாத்தில் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதுதொடர்பாக இருவரிடையே நிருபர்கள் கேட்டபோது, மவுனமே பதிலாக வந்தன. எனினும் தொடர்ந்து இந்த தகவல் பரவி வந்தன.

இந்நிலையில் நாக சைத்தன்யா மற்றும் சமந்தா இருவரும் தங்களுடைய பிரிவை சமூகவலைதளங்களில் உறுதி செய்தனர். அதையடுத்து விவகாரத்து விவகாரத்தில் நாக சைத்தன்யா குடும்பத்தினர் ஜீவனாம்சம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிகிறது.

அவருக்கு ரூ. 200 கோடி வரை ஜீவனாம்சம் பேசப்பட்டுள்ளது. ஆனால் அதை சமந்தா முழுவதுமாக மறுத்துவிட்டார். நான் சம்பாதிக்கிறேன் என்னை நான் பார்த்துக் கொள்வேன் என்று கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜீவனாம்சம் குறித்து தன்னம்பிக்கையுடன் பேசியுள்ள சமந்தாவுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

From Around the web