நான் ஒரு பாடகரை காதலித்தேன்.. ஆனா அவர் ஒரு Gay என்று தெரிந்ததும்..?? ஜெயசுதா பேட்டி   

 
1
70, 80ம் ஆண்டுகளில் உச்சத்தில் உள்ள பல ஹீரோக்களோடு  சேர்ந்து நடித்திருந்தார் நடிகை ஜெயசுதா. இயற்கையான நடிகை என அழைக்கப்படும் இவர், சிறந்த கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

சமீபத்தில் வெளியான விஜயின் வாரிசு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்திருந்தார். ஜெயசுதா ஏற்கனவே இரண்டு திருமணங்களை செய்து கொண்டார். அதில் இரண்டாவது கணவர் தான் விபரீத முடிவு எடுத்து உயிரிழந்தார்.

தற்போது ஜெயசுதா வேறு ஒருவருடன் நெருங்கி பழகுவதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை மறுத்த ஜெயசுதா தனது வாழ்க்கையை புத்தகமாக எழுதி வருகிறாராம்.

இந்த நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ஹீரோயினாக இருந்த காலத்தில் யார் மீதும் காதல் இருந்ததா எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில்,

நான் ஹீரோயினாக இருந்த காலகட்டத்தில் தெலுங்கு ஹீரோக்கள் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. ஆனால் அது காதலோ அல்லது வெறும் ஈர்ப்பா என்று எனக்கு தெரியவில்லை. அது நீண்ட காலம் நீடிக்க வில்லை. எனக்கு ஒரு கிரிக்கெட் வீரர் மீதும் க்ரிஷ்  இருந்தது அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். அவரை திருமணம் செய்து கொள்ள நினைத்து பல நாட்கள் கனவு கண்டேன். ஆனால் அது திருமணம் வரை செல்லாது என்று எனக்கு தெரியும்.

அத்துடன் ஒரு பாடகரையும் காதலித்தேன். இம்ரான் கான் போல அவரையும் திருமணம் செய்து கொள்ள நினைத்தேன்.  ஆனால் சில வருடங்களில் அவர் ஓரினச் சேர்க்கையாளர் என்று தெரிந்து கொண்டேன். பிறகு அதையும் செய்யக்கூடாது என்று உணர்ந்தேன். தற்போது எதுவும் வேண்டாம் என முடிவெடுத்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

From Around the web