எனக்கு விவாகரத்து ஆன காரணமே அந்த நடிகை தான்: குமுறும் நடிகை..!

நடிகை ஜெனிஃபர் லோபஸும் ஹாலிவுட் நடிகர் பென் அஃப்லெக்கும் ஒரு காலத்தில் காதலித்து பிரிந்துவிட்டனர். இதையடுத்து 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் காதலித்து கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள்.
அந்த திருமண வாழ்க்கை நிலைக்கவில்லை. லோபஸுக்கும், அஃப்லெக்கிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு 26-04-2024 அன்று பிரிந்துவிட்டார்கள். இதையடுத்து பென் அஃப்லெக்கிடம் இருந்து விவாகரத்து கேட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ஜெனிஃபர் லோபஸ்.
இது பென் அஃலெக்கின் இரண்டாவது விவாகரத்தாகும். முன்னதாக நடிகை ஜெனிஃபர் கார்னரை காதலித்து மணந்து 13 ஆண்டுகள் கழித்து விவாகரத்து பெற்றார். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் லோபஸை பிரிந்த பிறகு ஜெனிஃபர் கார்னர் மற்றும் பிள்ளைகளுடன் அதிக நேரம் செலிவிட்டு வருகிறார் அஃப்லெக்.
ஜெனிஃபர் லோபஸுக்கு இது நான்காவது விவாகரத்தாகும். இந்நிலையில் தன் நான்காவது திருமணம் விவாகரத்தில் முடிய பென் அஃப்லெக்கின் முன்னாள் மனைவியான ஜெனிஃபர் கார்னர் தான் காரணம் என தெரிவித்திருக்கிறாராம் லோபஸ்.
ஜெனிஃபர் லோபஸுக்கு நெருக்கமான ஒருவர் கூறியிருப்பதாவது,ஜெனிஃபர் கார்னரால் பயத்திலேயே இருந்தார் லோபஸ். எப்பொழுது வீட்டில் சண்டை நடந்தாலும் உடனே ஜெனிஃபர் கார்னரிடம் தான் அறிவுரை கேட்டு செல்வார் பென். அவர்களுக்கு இடையே ஏதோ இருக்கிறது என லோபஸ் சந்தேகப்பட்டார். ஆனால் தற்போது இருவரும் இவ்வளவு சந்தோஷமாக, நெருக்கமாக இருப்பது அந்த சந்தேகத்தை உறுதி செய்துவிட்டது.
நடப்பதை எல்லாம் பார்த்து லோபஸ் கோபத்தில் இருக்கிறார். இருவரும் சேர்ந்து தன்னை முட்டாளாக்கிவிட்டதாக உணர்கிறார். பென் சொன்ன பொய்களை எல்லாம் நம்பினார் லோபஸ். பென் மீது லோபஸுக்கு கோபம் இருந்தாலும் ஜெனிஃபர் கார்னர் தான் நிஜமான வில்லன் என அவர் நினைக்கிறார்.
லோபஸிடம் நல்லவிதமாக பேசிப் பழகி, பென்னுக்கும் அவருக்கும் இடையே வந்ததே கார்னர் தான் என்றார்.
இதற்கிடையே சொத்துக்களை பிரிப்பதில் ஒரு முடிவுக்கு வராததால் லோபஸ், பென்னின் விவாகரத்து வேலை தாமதமாகியிருக்கிறது. லோபஸை பிரிந்த பிறகு முன்னாள் மனைவியான ஜெனிஃபர் கார்னருடன் அதிக நேரம் செலவிடுகிறார் பென். கார்னர் மற்றும் 3 பிள்ளைகளுடன் நேரம் செலவிடவே பென்னுக்கு பிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.