என் வீட்டில் 70 கிலோ போதை மருந்து வச்சிருக்கேன்- பகீர் கிளப்பும் யுவன் மனைவி..!

 
மனைவியுடன் யுவன் சங்கர் ராஜா

முதன்முறையாக நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மனைவி ஸப்ரூன் நிஸார் தன்னுடைய வீட்டில் 70 கிலோ போதை மருந்து வைத்துள்ளதாக பகீர் கிளப்பியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறிய அவர், ஸ்ப்ரூன் நிஸார் என்கிற இஸ்லாமிய பெண்ணை மணந்துகொண்டார். இது யுவனுக்கு நடந்த மூன்றாவது திருமணமாகும். 

தற்போது இந்த தம்பதியினருக்கு ஸியா என்கிற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் முதல்முறையாக யுவனின் மனைவி ஸ்ப்ரூன் நிஸார் யு1 என்கிற யூ-ட்யூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். இது இசையமைப்பாளர் யுவனின் சொந்த சேனலாகும்.

அப்போது அவரிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு மிகவும் சுவாரஸ்யமான பதிலை அளித்துள்ளார் ஸ்ப்ரூன். வீட்டில் நீங்கள் போதைப் பொருள் வைத்திருப்பதாக தகவல்கள் வருகிறதே? என்று நெறியாளர் அவரிடம் விளையாட்டாக கேட்க, ஆமாம் என்னிடம் 70 கிலோ போதை பொருள் உள்ளது. அது வேறு யாருமில்லை யுவன் தான். எங்க போனாலும், என்னோட ட்ரக், விட்டமின்ஸ், நியூட்ரியண்ட்ஸ் எல்லாத்தையும் கூடவே எடுத்துட்டு போறேன் என நகைச்சுவையாக ஸப்ரூன் தெரிவித்துள்ளார். இது பல்வேறு வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

From Around the web