விஜய்க்காக சூப்பர்ஹீரோ கதை வைத்திருக்கிறேன்- பா. ரஞ்சித்..!

 
பா. ரஞ்சித்

சமீபத்தில் யூ ட்யூப் சேனல் நேர்காணலில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித் நடிகர் விஜய்யை வைத்து இயக்குவதற்காக தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழில் அட்டக்கத்தி மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா. ரஞ்சித். அதை தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்கள் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் பா. ரஞ்சித் மீது தேசியளவில் கவனம் விழுந்துள்ளது. அதை தொடர்ந்து அவரிடம் பிரபல யூ ட்யூப் சேனல் நேர்காணல் மேற்கொண்டது.

அதில் தன்னுடைய அடுத்த படங்கள் மற்றும் வேற்று மொழியில் இயக்கவுள்ள படங்கள் குறித்த தகவல்களை அவர் தெரிவித்தார். அப்போது அவர் தமிழில் விஜய்யை வைத்து படம் உருவாக்க அதிகம் விரும்புவதாக தெரிவித்தார்.

அதற்காக ஒரு சூப்பர்ஹீரோ கதை தயார் செய்து வைத்திருப்பதாகவும், கற்பனையான விஷயங்களை சொல்லாமல், உண்மை சம்பவத்துக்கு அருகாமையில் அந்த கதையை எழுது முடித்திருப்பதாகவும் ரஞ்சித் தெரிவித்தார்.

என்னுடைய இயக்கத்தில் விஜய் நடித்தால், அவரை சூப்பர்ஹீரோவாகத்தான் நடிக்க வைப்பேன். இதுகுறித்து மிஷ்கினிடமும் பேசி இருக்கிறேன். அவரும் இந்த கதையை பாராட்டினார் என இயக்குநர் பா. ரஞ்சித் கூறினார்.
 

From Around the web