உங்க மேல எனக்கு ஒரு கண்ணுங்க... சர்ச்சையாகும் ரஜினி பற்றி பேசிய பெப்சி உமா..!  

 
1
15 வருடங்களாக ஒரே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் பெப்சி உமா என்ற உமா மகேஸ்வரி. அந்த நாட்களில் இவரின் நிகழ்ச்சியில் ஒருமுறையாவது பேசிவிட வேண்டும் என்று தவம் இருந்த ரசிகர்கள் ஏராளம். இப்படி பிரபலமான தொகுப்பாளினியாக இருந்த பெப்சி உமாவிற்கு சினிமாவில் இருந்து பல வாய்ப்புகள் வந்தும் அதையெல்லாம் அவர் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.ரஜினியை அவரின் இரண்டு படங்களில் நடிக்க பெப்சி உமாவை கேட்டும் அவர் மறுத்துவிட்டாராம்.

அதுமட்டுமல்லாமல் ஷாருக்கானுடன் நடிக்கும் வாய்ப்பையும் தவிர்த்துவிட்டாராம். இப்படி தொகுப்பாளினியாக மட்டும் இருந்து பிரபலமான பெப்சி உமா நேர்காணல் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.அதில், \”இதை நான் எங்கும் சொன்னது இல்லை. இது ராக்கிங் மாதிரி இருக்கும். ரஜினிகாந்த் ஒரு முறை என்னை தொடர்புகொண்டுஉங்க பக்கத்துல எந்த பிரபலம் இருந்தாலும் கண்ணு அங்க போகாம உங்க பக்கமே போகிறது\” என்று சொன்னதாக கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.இதற்கு முன்பு ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த் செய்தது குறித்து ரம்பா பேசிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.”,

From Around the web