என் பர்சனல் வாழ்க்கையை பர்சனலாக வைக்க தவறிவிட்டேன் - பப்லு வேதனை..!

 
1
சில மாதங்களுக்கு முன்பு நடிகர் பப்லு பிரித்விராஜ் தன்னை விட 30 வயது குறைவான ஷீத்தல் என்ற பெண்ணை காதலிப்பதாக அறிவித்தார். இருவரும் ஜோடி புறாக்களாக சுற்றி திரிந்தனர்.

இதற்கிடையில் பப்லு – ஷீத்தல் காதலில் விரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து சமூக வலைதளத்தில் ‘பிரிந்துவிட்டீர்களா’ என்ற ரசிகரின் கேள்விக்கு ஷீத்தல் ‘லைக்’ செய்து சூசகமாக தனது பதிலை அறிவித்தார்.

இந்தநிலையில் பப்லு, ‘வாழ்க்கையில் நல்ல பாடம் கற்றுக்கொண்டேன். என் பர்சனல் வாழ்க்கையை பர்சனலாக வைக்க தவறிவிட்டேன்’, என்று வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, ‘இந்த வயதிலும் நான் ஹேப்பியா இருக்கிறேன். என்னை போலவே எல்லோரும் ஹேப்பியா இருக்கவேண்டும் என்று நான் குழந்தை தனமாக நினைத்து, வெளியே சொன்ன சில விஷயங்கள் இப்போது எனக்கெதிராகவே திரும்பி இருக்கிறது. அனைவருமே காரி துப்புகிறார்கள்.

இனியும் என் சந்தோஷத்தை வெளியே சொல்லி நான் எதுக்கு அவமானம் தேடிக்கொள்ள வேண்டும்?

ஷீத்தலுக்கும், எனக்கும் இடையே என்ன ஆனது? என்பதெல்லாம் என் தனிப்பட்ட விஷயம். இனியும் என் தனிப்பட்ட விஷயத்தை வெளியே பேசமாட்டேன். என்னை பற்றிய கேலி, கிண்டலுக்கு நானே எதுக்கு இனியும் தீனி போட வேண்டும்?’ என்று ஆதங்கப்பட்டார்.

From Around the web